வேலுார் : குடியாத்தம் அருகே, லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கரும்புகை வந்ததால் 20 நிமிடம் தாமதமாக சென்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6:00 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே வளத்துார் ரயில்வே ஸ்டேஷக்கு காலை 9:00 மணிக்கு வந்தது. அப்போது ஐந்தாவது பெட்டியின் அடியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதை பார்த்து பயந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில்வே பொறியாளர்கள் புகை வந்த பகுதியை ஆய்வு செய்தனர். அதில் ரயில் பெட்டி சக்கரம் அருகே உள்ள இணைப்பு ஒன்றோடு ஒன்று உராய்ந்ததால் புகை வந்ததும், தொழில் நுட்ப கோளாரால் இது போல நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சக்கரம், இணைப்பு உராய்வதை சரி செய்தனர். இதனால் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.