வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது..

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது.
இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நி்கழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரூ 294 கோடியில், கோவை - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 8ம் தேதி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, துவக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.