மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான தார் 4X4 வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் 2x4 ரியர் வீல் டிரைவ் பற்றிய வித்தியாசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக எல்லா வாகனப்பிரியர்களுக்கும் பிடித்தமான எஸ்யூவி மாடல் என்றால் மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலே முதலில் நினைவுக்கு வரும். ஒருசில நடுத்தர மக்களுக்கும் வாழ்கையில் ஒருமுறையாவது தார் போன்ற எஸ்யூவி ஆஃப் ரோடு கார்களை வாங்கவேண்டும் என்பது கனவாகவே இருக்கும். ஆனால், மஹிந்திரா தார் 4x4 வீல் டிரைவ் காரை பொறுத்தவரை அதிக விலை என்பதாலே நடுத்தர மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எல்லா மக்களும் வாங்கும் விதமாக மிகவும் குறைவான விலையில் 2x4 ரியர் வீல் டிரைவ் தார் மாடலை அறிமுகம் செய்து அதிர்ச்சி கொடுத்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
![]()
|
இந்த இரண்டு வெர்ஷன்களுக்கும் செயல்திறனைத் தவிர, டிசைன் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஃபாலோ மீ வசதியுடன் கூடிய ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதிகள் ஒரே மாதிரியாக உள்ளன.
![]() Advertisement
|
மேலும் இந்த இரு கார்களிலும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த 2WD மாடலில் 4x4 கியர் ஷிப்ட் லிவர் பதிலாக சிறிய கிளாஸ் வைக்கும் அளவிற்கு துளை ஒன்று உள்ளது.
மஹிந்த்ரா தார் 2x4
![]()
|
இதன் 2WD மாடல் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. 45 லிட்டர் ஃபியூயல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் எஞ்ஜின் 115BHP பவர் மற்றும் 300NM டார்க் திறனை வெளிப்படுத்தும். இத்துடன், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆஃப் ரோடு (Off Road Mode) ஆப்ஷன் இடம்பெறாமல் ரஃப் ரோடு மோடு (Rough Road mode) ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது உள்ளது.
மஹிந்த்ரா தார் 4x4
![]()
|
அதேபோல் 4WD மாடல் 2.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. 57லிட்டர் ஃபியூயல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் எஞ்ஜின் 130BHP பவர் மற்றும் 300 NM டார்க், திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இதன் பவர் 130BHP பவர் மற்றும் 300NM டார்க் வசதி உள்ளது. இதிலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.
இதில் கூடுதலாக சாஃப்ட் ரூஃப் (Softroof) மற்றும் ஹார்டு ரூஃப் (Hard roof) என இரு ரூப் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் குறைந்த விலை மஹிந்திரா தார் மாடலில் ஹார்டு ரூஃப் (Hard roof) தேர்வுடன் மட்டுமே வருகிறது. பாதுகாப்பு வசதிகளில் இரு கார்களிலும் ஒரே போன்ற வசதிகள் உள்ளன. TPMS, டூயல் ஏர் பேக், ரியர் பார்க்கிங் சென்சார், ESP, ஓவர் ஸ்பீட் அலெர்ட், பேனிக் பிரேக் சிக்னல் போன்ற முக்கிய பாதுகாப்பு வசதிகள் பல இடம்பெற்றுள்ளன.
மஹிந்திரா தார் 4X2 வீல் டிரைவ் ஆப்ஷனை பொறுத்தவரை, ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்பம் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்புகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் இந்த எஸ்யூவி கிடைப்பதால் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் மைலேஜை பொறுத்தவரை, 4X2 வீல் டிரைவ் லிட்டருக்கு 15 முதல் 17 கிமீ மைலேஜ் வரையும், 4WD மாடல் தோராயமாக 15கி.மீ., மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
![]()
|
விலை வித்தியாசம் பற்றி பார்க்கும்பொழுது, மஹிந்திரா தார் 2WD விலை 9.99 லட்சம் ரூபாய் முதல் தொடங்கி 13.49 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோவ்ரூம் விலை) வரை உள்ளது. அதேபோல் 4WD மாடல் ரூ.13.58 லட்சம் ரூபாயில் (எக்ஸ்ஷோரூம் விலை) தொடங்கி 16.29 லட்சம் ரூபாய் விலை வரை விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் மற்றும் மைலேஜ் அடிப்படையில் நடுத்தர வாடிக்கையாளர்களுக்கு இந்த குறைந்த விலை 1.5 லிட்டர் ரியர் வீல் 2x4 டிரைவ் தார் மிகவும் சிறந்த தேர்வாகும்.