கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன், 28. இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண்வீட்டாருக்கு ஜெகன் மேல் கோபம் இருந்துள்ளது.
இன்று(மார்ச் 21) மதியம் கே.ஆர்.பி., அணை அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஜெகனை அவர் மனைவி சரண்யாவின் தந்தை தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொன்றனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.. சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.