வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் எம்.பி பார்த்திபன் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த விளக்கம்:
திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
பந்தயம் மற்றும் சூதாட்டம் இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.