மலைகள், புல்வெளிகள், காடுகள் என பல்வேறு இடங்களில் நாம் ஏற்கனவே முகாமிட்டு இருப்போம். ஆனால், பனிக்கட்டிகளுக்கு நடுவே முகாமிட்டு தங்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருந்து இருக்குமே தவிர நாம் நடைமுறையில் அதனை சாத்தியமாக்கி இருக்க மாட்டோம்! ஆனால் இனி இக்லூ வீட்டில் தங்க, மணாலியின் சேத்தன் பள்ளத்தாக்கிற்கு சென்றால் போதும். புதுவிதமான ஒரு அனுபவத்தை பெற்றிடலாம்.
திகைப்பூட்டும் மணாலியில் உள்ள சேத்தன் பள்ளத்தாக்கின் பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன இந்த வீடுகள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இக்லூ வீட்டில் தங்குவது மட்டுமின்றி இங்கு கேம்ப்ஃபயர், சாகச விளையாட்டுகள், பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
![]()
|
இந்த இடம் மலைகளாலும், பனி சிகரங்களாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு சென்று தங்குவதன் மூலம் நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.இது இந்தியாவின் முதல் இக்லூ தங்கும் இடம் ஆகும். பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங் மற்றும் இக்லூ ஸ்டேக்கள் அனைத்தையும் அனுபவிக்க ஜனவரி-ஏப்ரல் சிறந்த நேரமாகும்.
நவீன வசதிகள் அடங்கிய இக்லூ ஸ்டே
பொதுவான கழிவறைகள், படுக்கைகள், சார்ஜிங் வசதிகள், போர்வைகள் போன்ற வசதிகளுடன் ஒரே நேரத்தில் ஒரு இக்லூவில் குறைந்தபட்சம் 2 நபர்களும் மற்றும் அதிகபட்சமாக 4 நபர்களும் தங்கலாம்.
![]()
|
உங்கள் முகாமில் இருந்தப்படியே பனி மூடிய மலைகளின் காட்சிகளுடன் மயக்கும் சூரிய உதயத்தைக் கண்டு மகிழ்ந்திடலாம். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மாலையில் இசையுடன் கூடிய கேம்ப்ஃபயரில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.
பயணிகள் தங்களுடைய வாகனங்களை முகாம் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தலாம். செக்-இன் செய்த உடனேயே ஜம்ப்சூட் மற்றும் ஸ்னோஷூக்கள் வழங்கப்படும்.
![]()
|