சென்னை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராமங்கள் தோறும் கிராமசபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டங்கள் ஆண்டுதோறும் நான்கு தடவை நடைபெறும். தற்போது இதன் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம சபை கூட்டங்களை கண்காணிப்பதற்காக நம்ம கிராம சபை மென் பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (22 ம் தேதி) தமிழகம் முழுவதும் கிராமபை கூட்டம் நடைபெற உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement