எல்லை தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது| 6 Sri Lankan fishermen arrested for catching fish across the border | Dinamalar

எல்லை தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது

Added : மார் 21, 2023 | |
துாத்துக்குடி:இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவில் ரோந்து சென்றனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை படகை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த இலங்கையைச் சேர்ந்த முகமதுரஜார், நுவான், பிரஹீத், ரூவான், மதுரங்,
6 Sri Lankan fishermen arrested for catching fish across the border   எல்லை தாண்டி மீன் பிடித்த  6 இலங்கை மீனவர்கள் கைது

துாத்துக்குடி:இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவில் ரோந்து சென்றனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை படகை மடக்கிப் பிடித்தனர்.

அதில் இருந்த இலங்கையைச் சேர்ந்த முகமதுரஜார், நுவான், பிரஹீத், ரூவான், மதுரங், அப்துல் ரகுமான் ஆகியோரைக் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனர். மீனவர்கள் மற்றும் படகு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

'கியூ பிராஞ்ச் போலீசாரின் விசாரணைக்கு பின் அவர்கள் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X