ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடக்கும் தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக - கர்நாடக அணியினர் இரு பிரிவிலும் வென்றனர்.
புதுடில்லி ஹாக்கி இந்தியா சார்பில், முதலாவது ஜூனியர் ஹாக்கி தென்னிந்திய சாம்பியன்ஷிப் - 2023 போட்டிகள் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானத்தில் மார்ச் 19ல் துவங்கியது.
வரும் 26ல் நிறைவு பெறுகிறது. நேற்று முன் தினம், பெண்கள் பிரிவில் புதுச்சேரியை 4 - 0 என்ற கோல் கணக்கில் தெலுங்கானா வென்றது. அம்மாநில கங்கோத்ரி பத்நாத் சிறந்த வீராங்கனையாக தேர்வு பெற்றார்.
ஆந்திராவை 6 - 2 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வென்றது. யுவஸ்ரீ சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கேரளாவை 5 - 0 என்ற கோல் கணக்கில் கர்நாடகா வென்றது. அம்மாநில மெகர்கர் மேத்தா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
மதியம் நடந்த ஆண்கள் பிரிவில் புதுச்சேரியை 19 - 0 என்ற கோல் கணக்கில் கர்நாடகா வென்றது. ரெட்டிகிரண் சிறந்த வீரராக தேர்வு பெற்றார்.
கேரளாவை 3 - 1 என்ற கோல் கணக்கில் தமிழகம் வென்றது. ராமநாதன் சிறந்த வீரராக தேர்வானார். தெலுங்கானாவை 5 - 0 என்ற கோல் கணக்கில் ஆந்திரா வென்றது. அகில் வெங்கட் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.