என்.எல்.சி., அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு | Farmers besieged NLC officials and riot near Chetiathoppu | Dinamalar

என்.எல்.சி., அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

Added : மார் 21, 2023 | |
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டியில் அளவீடு செய்ய வந்த என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர்.கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கரிவெட்டியில் நேற்று முன் தினம் மாலை, நெய்வேலி என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை
Farmers besieged NLC officials and riot near Chetiathoppu  என்.எல்.சி., அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டியில் அளவீடு செய்ய வந்த என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர்.

கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கரிவெட்டியில் நேற்று முன் தினம் மாலை, நெய்வேலி என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர்.

தகவல் அறிந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

கடந்த 2000ம் ஆண்டு முதல் 2006 வரை கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில்நெய்வேலி என்.எல்.சி.,நிறுவனம் நிலம் கையகப்படுத்தியபோது, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாற்று குடியிருப்பு தருவதாக உறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை.

தற்போது புதிய குடியமர்வு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் என கரிவெட்டியில் நிலங்களை விவசாயிகளிடம் கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

கடந்த காலங்களில் கொடுத்த நிலத்துக்கு சம இழப்பீடு வழங்க வேண்டும். மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், வாழ்வாதார வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அதிகாரிகளை அளவீடு செய்ய அனுமதிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தீக்குளிக்க முயற்சி



கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் வந்தபோது, அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரிவெட்டியைச் சேர்ந்த விஜயா, 40, பஞ்சராஜ், 47, ராமலிங்கம், 50, உட்பட விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

போலீசார் மற்றும் பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X