புதுடில்லி:மாணவர்களின் மனம் மற்றும் உணர்வு ரீதியான நலனைப் பாதுகாக்க கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களைத் தயாரித்துவருவதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மாணவர்களின் மனநலம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்தது. பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை, சி.பி.எஸ்.இ., - ஏ.ஐ.சி.டி.இ., - யு.ஜி.சி., உள்ளிட்ட அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
மாணவர்களின் மனம் மற்றும் உணர்வு ரீதியான நலனைப் பாதுகாக்க விரிவான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் தயாரித்து வருகிறது.
இந்த வழிகாட்டுதல்கள், பள்ளி முதல் உயர் கல்வி நிறுவனங்கள் வரை பொருந்தும். நாடு முழுதும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.