வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டில்லி ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிந்து நேரில்ஆஜராக சம்மன் அனுப்பியது. பிப்.26-ம்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பின் மார்ச் 9-ம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவரது நீதிமன்ற காவலை ஏப். 3-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி நாக்பால் உத்தரவிட்டார்.
![]() |
இந்நிலையில் ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று (மார்ச்.21-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அதில் தனது மனைவி உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், மகன் வெளிநாட்டில் இருப்பதால் கவனிக்க யாருமில்லை என்பதால் ஜாமினில் விட வேண்டும் என கூறியிருந்தார்.
சி.பி.ஐ.,சார்பில் , மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை கலைத்து விடுவார் என ஜாமின் வழங்கிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.