சென்னை, சென்னை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது.
பெண்களின் விளையாட்டு திறமைகளை அங்கீகரிக்கவும், ஊக்கப்படுத்தவும், நாளை மறுதினம், தடகளம், யோகா மற்றும் நீச்சல் போட்டிகள் நடக்க உள்ளன.
சென்னை, நேரு பூங்காவில் பத்மாசனம், மத்ஸ்யாசனம், ஹலாசனம், உஷ்ட்ராசனம், தனுராசனம் ஆகிய யோகாசன போட்டிகள் நடக்க உள்ளன.
அதேபோல ஓட்டங்களில் 100, 200, 400 மீட்டர்; நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடக்க உள்ளன.
மேலும், வேளச்சேரி நீச்சல் குளத்தில் 50 மீட்டரில் 'ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ரோக், பட்டர்பிளை' உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
இவற்றில் பங்கேற்க ஆர்வமுள்ள 20 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள், நாளை மறுதினம் காலை 7:00 முதல் காலை 9:00 மணிக்குள், அந்தந்த விளையாட்டு அரங்கில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களை, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.