பொழப்புக்கே வழியில்லை... : மீண்டும் போட்டியிட எம்.பி.,க்கள் தயக்கம்!| There is no way out...: MPs are reluctant to contest again! | Dinamalar

'பொழப்புக்கே வழியில்லை...' : மீண்டும் போட்டியிட எம்.பி.,க்கள் தயக்கம்!

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (55) | |
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற 39 பேரில், 38 பேர் தி.மு.க., கூட்டணியை சேர்ந்தவர்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை சம்பாதிக்க முடியாததோடு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில், அவர்கள் தவிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள்
There is no way out...: MPs are reluctant to contest again!  'பொழப்புக்கே வழியில்லை...' : மீண்டும் போட்டியிட எம்.பி.,க்கள் தயக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற 39 பேரில், 38 பேர் தி.மு.க., கூட்டணியை சேர்ந்தவர்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.

தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை சம்பாதிக்க முடியாததோடு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில், அவர்கள் தவிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஒரு சிலர் தவிர்த்து, மற்றவர்களிடம் இருந்து, தேர்தல் நிதி என, தலா 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது.

அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். அதனால், அவர்களுக்கு தேர்தல் நிதி குறித்த நெருக்கடி இல்லை.ஆனால் மற்றவர்கள், எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில், வட்டிக்கு கடன் வாங்கி தேர்தல் நிதி கொடுத்தனர்.


latest tamil news

* எம்.பி.,யாகி விட்டால் ஆண்டுதோறும் மத்திய அரசு தரும் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில், 25 சதவீத கமிஷன் தொகையாக 1.25 கோடி ரூபாய் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு 6.25 கோடி ரூபாய் நிச்சயம்


* கே.வி., பள்ளிகள் என அழைக்கப்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில், ஆண்டுகோறும் 10 'சீட்'கள் வரை, எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வழங்கப்படும்.

இதன் வாயிலாக, ஒரு, 'சீட்'டுக்கு 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் அந்த வகையில் 2.5 கோடி ரூபாய் நிச்சயம்


* எம்.பி.,யாகி விட்டால், டில்லியில் செல்வாக்கை உருவாக்கி, 'மீடியேட்டர்' பணி வாயிலாக, சில கோடிகளை சம்பாதிக்க முடியும். இப்படி மூன்று வகையான நடைமுறைகள் வாயிலாக, 10 கோடி ரூபாய் நிச்சயம் கிடைக்கும் என்பது, அவர்களின் கணக்காக இருந்தது.

ஆனால், மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. இதனால், தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்களுக்கு நினைத்த அளவுக்கு வருமானம் இல்லாமல் போனது.


இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று உலுக்கி எடுக்க, மத்திய அரசு, எம்.பி.,க்களுக்கு வழங்கி வந்த தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தது. கூடவே, கே.வி., பள்ளிகளில் எம்.பி.,க்கள் பரிந்துரையும் ரத்து செய்யப்பட்டது.


இதனால், எதிர்பார்த்த பணவரத்து இல்லாததால், எம்.பி.,க்கள் பலரும் நிலை குலைந்து போயினர். சம்பளம், சலுகைகள் தவிர்த்து, வருமானம் என சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாததால், தேர்தலுக்காக வாங்கிய கடனுக்கு வட்டியையும், அசலையும் கொடுக்க

முடியவில்லை.இப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.,க்கள் கடன் சுமையில் தவித்து வருகின்றனர். குறிப்பாக தென் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, திருவண்ணாமலை, உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் கடன்

சுமையில் உள்ளனர்.


கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் நிலைமை, வேறு வகையாக உள்ளது. கடந்த முறை இரு கம்யூ., கட்சிகளுக்கும் சேர்த்து, தேர்தல் செலவுக்காக தி.மு.க., 25 கோடி ரூபாய் கொடுத்தது. அதேபோல, மற்ற கூட்டணி கட்சியினருக்கும் பணம் கொடுக்கப்பட்டது. அதனால், கூட்டணி கட்சியினரைப் பொறுத்தவரை, தேர்தல் செலவும், அதற்காக கடன் வாங்கும் அவசியமும் இல்லாமல் போனது. ஆனாலும், இந்த பதவியால் வருமானம் இல்லாததால், அவர்களுக்கும் பண நெருக்கடி உள்ளது.


வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு வெறும், 'சீட்' மட்டுமே கொடுக்க, தி.மு.க., தலைமை முடிவு எடுத்துள்ளது. அதனால், கூட்டணி கட்சிகள் சார்பில் வென்றவர்கள், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க தயங்கும் நிலை காணப்படுகிறது.

அதனால், புதியவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். தேர்தலுக்கு பணம் செலவழிப்பவர்களாக பார்த்து, வேட்பாளராக்க வேண்டிய கட்டாயம், கூட்டணி கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

-lநமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X