வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியல்களை, கட்சி இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல், மின் வாரியத்தின் எண்ணுார் அனல் மின் திட்ட ஒப்பந்தம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு கொள்முதல் போன்றவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக, அண்ணாமலை ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார்.
முதல்வர் குடும்பத்தினரின் துபாய் பயணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு தொடர்பாகவும், பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, சந்தேகங்களை எழுப்பினார்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஏப்., 14 முதல் பாதயாத்திரை செல்வதாகவும், அப்போது தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவதாகவும், அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
![]()
|
கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, அங்கு தேர்தல் பணியாற்றி வருகிறார். இதனால், திட்டமிட்டபடி அவரின் பாதயாத்திரை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், அண்ணா மலை அறிவித்தபடி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்கள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர், முதலீடு செய்துள்ளனர் என்ற விபரங்கள், தமிழக பா.ஜ., இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுவரை பா.ஜ., சேகரித்த தகவல்களின்படி, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.