வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை, 'இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில், 31 ஆயிரம் விமானிகள், 26 ஆயிரம் மெக்கானிக்குகள் தேவைப்படுவர்' என, போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்தா குறிப்பிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'போயிங்' விமான தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான, போயிங் இந்தியாவின் தலைவர் சலீல் குப்தா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட பின், இந்தியாவில் விமான போக்குவரத்து துறை பெரிய அளவு முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
இந்திய விமான நிறுவனங்கள், புதிதாக பல விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. இதற்கேற்ப, விமான நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இருக்கும் விமான நிலையங்களை விரிவுபடுத்த வேண்டும்.
இதைத் தவிர, அடுத்த, 20 ஆண்டுகளில், 31 ஆயிரம் விமானிகள், 26 ஆயிரம் மெக்கானிக்குகள், இந்தியாவுக்கு தேவைப்படுவர். இதை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
'டாடா' குழுமத்தின் 'ஏர் இந்தியா' நிறுவனம், போயிங் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 'ஏர்பஸ்' நிறுவனங்களிடம் இருந்து, 470 விமானங்கள் வாங்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வரும், 2040ல், இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, போயிங் நிறுவனம் கடந்த செப்டம்பரில் கணிப்பு வெளியிட்டு இருந்தது.