இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த, முதல் இந்திய கட்சி, மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம், தமிழக குடும்ப தலைவியரின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக, முதல்வரை பாராட்டுகிறேன்.டவுட் தனபாலு: இதே திட்டத்தை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில சொன்னப்ப,
Wages for housewives   இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த, முதல் இந்திய கட்சி, மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம், தமிழக குடும்ப தலைவியரின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக, முதல்வரை பாராட்டுகிறேன்.

டவுட் தனபாலு: இதே திட்டத்தை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில சொன்னப்ப, 'சொந்தமா யோசிக்க கூட துப்பில்லாம, எங்க திட்டத்தை காப்பி அடிக்கிறாங்க'ன்னு பாய்ந்து பிராண்டுனீங்க... இப்ப, வரவேற்பு பத்திரம் வாசிக்கிறீங்களே... கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்வதில் நல்லாவே தேறிட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: உ.பி.,யில் உள்ள பெண் கைவினைஞர்களில், 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பிரதமரின் திட்டத்தின் கீழ், அவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகள் உள்ளன. இதனால், 'உழைக்கும் பணத்தை சேமிக்க முடிகிறது. எங்கள் பணத்தை நாங்களே எடுத்து செலவு செய்ய முடிகிறது' என்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், சுதந்திரமாக இருக்க முடிகிறது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

டவுட் தனபாலு: உ.பி.,யில் முஸ்லிம் சமுதாய மக்களை, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தன... பா.ஜ., அரசு தான், அவர்களது முன்னேற்றத்துக்கு பாதை அமைச்சு கொடுத்திருக்கு... அதனால் தான், அங்க மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைஞ்சிருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!


latest tamil news


தமிழக நிதித் துறை செயலர் முருகானந்தம்: 'டாஸ்மாக்' மது விற்பனை மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, 38 ஆயிரம் கோடி ரூபாய்; ஆயத்தீர்வை வாயிலாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் என, இந்த நிதியாண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது,முந்தைய ஆண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 20 வருஷங்களுக்கு முன்னாடி, 'டாஸ்மாக்' மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினப்ப கிடைச்ச வருவாய், 2,500 கோடி ரூபாய்... இன்னைக்கு, 20 மடங்கு அதிகரித்து, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வந்து நிற்கிறது... தமிழகத்துல, சில லட்சங்களாக இருந்த, 'குடி'மகன்கள் எண்ணிக்கையை, கோடிகளில் உயர்த்தியது தான், இரண்டு திராவிடக் கட்சிகளின் வெட்கக்கேடான சாதனை என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

22-மார்-202309:35:24 IST Report Abuse
theruvasagan காசுக்கும் பதவிக்கும் எதையும் செய்யத் துணிந்த இழிபிறவிகள் இங்கே அனேகம் உண்டு.
Rate this:
Cancel
22-மார்-202306:59:43 IST Report Abuse
கருத்து சுந்தரம் தென் சென்னை Lok Sabha சீட்டுக்கு foundation போடுது கமலு. இந்தாளுக்கும் தீம்க புளிப்பு முட்டாய் குடுக்கப் போறானுவோன்னு தெர்ல போலகுது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-மார்-202305:44:59 IST Report Abuse
meenakshisundaram idhi kamal பெருமைப்பட ஒன்றுமே இல்லை ,ஈரோட்டில் மொத்த கட்சியும் திமுகவுக்கு அடகு போய்டுச்சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X