அ.தி.மு.க., இல்லாமல் 10ல் வெற்றி -அண்ணாமலையின் கூட்டணி திட்டம்
அ.தி.மு.க., இல்லாமல் 10ல் வெற்றி -அண்ணாமலையின் கூட்டணி திட்டம்

அ.தி.மு.க., இல்லாமல் 10ல் வெற்றி -அண்ணாமலையின் கூட்டணி திட்டம்

Updated : மார் 22, 2023 | Added : மார் 22, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : அ.தி.மு.க. இல்லாமல் மூன்றாவது அணி அமைத்து 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அக்கட்சி மேலிடத்திடம் முன்வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.மு.க. -- பா.ஜ. இடையேயான விரிசல் மோதலாக உருவெடுத்துள்ள நிலையில் மார்ச் 17- நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை 'கூட்டணி விஷயத்தில் சமரசம் செய்யும் நிலை வந்தால் அந்த
Win 10 without ADMK - Annamalais coalition plan   அ.தி.மு.க., இல்லாமல் 10ல் வெற்றி -அண்ணாமலையின் கூட்டணி திட்டம்

சென்னை : அ.தி.மு.க. இல்லாமல் மூன்றாவது அணி அமைத்து 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அக்கட்சி மேலிடத்திடம் முன்வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



அ.தி.மு.க. -- பா.ஜ. இடையேயான விரிசல் மோதலாக உருவெடுத்துள்ள நிலையில் மார்ச் 17- நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை 'கூட்டணி விஷயத்தில் சமரசம் செய்யும் நிலை வந்தால் அந்த இடத்தில் இருக்க மாட்டேன்' என்றார்.

அண்ணாமலை இப்படி பேசியதன் பின்னணி குறித்து பா.ஜ. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

2019-ல் பா.ஜ.வுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே பழனிசாமி ஒதுக்கினார். தினகரன் தனிக் கட்சி துவங்கியதால் அ.தி.மு.க. ஓட்டுகள் பிரியும் என தெரிந்தும் நான்கு தொகுதிகளை தென் மாவட்டங்களிலேயே ஒதுக்கினார். வரும் லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கும்.

வேண்டுமானால் ஒரு தொகுதியை மாற்றித் தருவார். நெருக்கடி தந்தால் ஏ.சி.சண்முகமும் பாரிவேந்தரும் தாமரை சின்னத்தில் நிற்க சம்மதிப்பார். இதற்கு மேல் அ.தி.மு.க.விடம் எதுவும் கிடைக்காது என்பதை தேசிய தலைமையிடம் அண்ணாமலை தெளிவாக கூறி விட்டார்.

2014-ல் பா.ஜ. அமைத்த மூன்றாவது அணிக்கு 19 சதவீத ஓட்டுகளும் இரண்டு எம்.பி.க்களும் கிடைத்தனர். அதுபோல அ.தி.மு.க. இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் திட்டத்தை மேலிடத்திடம் அண்ணாமலை முன்வைத்துள்ளார்.

பா.ம.க., பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி அமைத்தால் தென் சென்னை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, சிதம்பரம் தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, திருவள்ளூர், ஆரணி, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மேலும் 10 தொகுதிகளில் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம். வலுவான வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு இணையாக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தினால் இதை சாதிக்கலாம்.

இது தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி அமைப்பதற்கான அடித்தளமாக அமையும். மார்ச் 10-ம் தேதி கிருஷ்ணகிரி வந்த தேசிய தலைவர் நட்டாவிடம் தனியாக பேசும்போது இதை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். தி.மு.க. அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது.

'இதை பயன்படுத்த மூன்றாவது அணி அமைக்கலாம்' என அண்ணாமலை வலியுறுத்தி வருவதாகவும் 'கர்நாடக தேர்தல் முடிந்ததும் இது பற்றி பேசலாம்' என நட்டா தெரிவித்ததாகவும் பா.ஜ.வினர் தெரிவிக்கின்றனர்.

2014-ல் பா.ஜ. அமைத்த மூன்றாவது அணிக்கு 19 சதவீத ஓட்டுகளும் இரண்டு எம்.பி.க்களும் கிடைத்தனர். அதுபோல அ.தி.மு.க. இல்லாத 3வது அணியை அமைக்கும் திட்டத்தை மேலிடத்திடம் அண்ணாமலை முன்வைத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

AL.MANIVASAGAM - Karaikal,இந்தியா
22-மார்-202312:39:36 IST Report Abuse
AL.MANIVASAGAM இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.எனக்கு வயது எழுபது.என் அனுபவத்தில் இதை செய்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியும். இது பொன்னான வாய்ப்பு. இதை நழுவ விட்டால் இனி இந்த வாய்ப்பு கிடைக்காது. பாஜகவுடன் கூட்டணியில்தான் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது என்று சொல்லி பெரும்பான்மை இந்துக்களை கேவலப்படுத்தும் எடப்பாடி கூட்டணி வைக்க கூடாது. தோற்றாலும் பரவாயில்லை.தற்போது திரு.கே.அண்ணாமலையார் சிறந்த தலைவர். மூத்த தமிழக பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகி எடப்பாடி செல்லட்டும். இல்லாவிடில் அவர்கள் எல்லோரும் சிறுபான்மையினராக மாற்றுக்கருத்து.நன்றி.
Rate this:
Cancel
karuna - Pondicherry ,இந்தியா
22-மார்-202311:32:45 IST Report Abuse
karuna நிச்சயமாக பா.ஜ.க வெல்லும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X