சென்னை : ''தி.மு.க., ஆட்சியை குறை கூறியவர்கள், கடையை மூட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என்று, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.
சென்னை கொளத்துார், ஜி.கே.எம்., காலனியில், தி.மு.க., சார்வில், முதல்வர் பிறந்த நாள் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், கபிலன், யுகபாரரதி, கங்கை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கவியரங்கத்தை துவக்கி வைத்து, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் பேசியதாவது:
தி.மு.க., என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு, பதில் அளிக்கும் வகையில், இன்று நம்மிடம் பெரிய பட்டியல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல திட்டங்களை, முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
அந்த வரிசையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
தி.மு.க., ஆட்சியை குறை கூறியவர்கள், இனி தங்களது கடையை மூடி விட்டு, ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டனர்.