திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் (இந்தியா 1) இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு மர்மநபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு உடைக்க முயற்சித்துள்ளார்.
அப்பொழுது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசாரை கண்டு, கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். கொள்ளையில் ஈடுப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement