வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தூத்துக்குடி: ‛திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இருக்கின்றனர்' எனவும், ‛திமுக, தமிழக மக்களுக்கு பாரமாக இருக்கிறது' என்றும் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ., சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை.
திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம். திமுக, தமிழக மக்களுக்கு பாரமாக இருக்கிறது. புதுச்சேரியில் தமிழ் பேராசிரியருக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் தான் வழங்கப்படுகிறது. இதுதான் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் நிலை.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையை படித்தது தமிழா? என் தாய் தமிழ் அழுது விடுவாள். திமுக தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு; திமுக தமிழ் விரோதி. எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில் இருக்கிறது.
காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான். 2024ல் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 30 இடங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.