சென்னை: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி ‛பேட்டிங்' தேர்வு செய்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மார்ச் 22) 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் இல்லை.