திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலினுள் உள்ள அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வாலிபர் ஒருவர் வெட்ட முயன்றுள்ளார்.
இதையடுத்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவருடன் வந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் ஜெனீபர், 23, என்பதும், உடன் வந்தவர் அவரது ஆண் நண்பர் ப்ரித்தம், 30, என்பதும், இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.