சென்னை: கடைசி ஓரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 270 ரன்களை இலக்காக ஆஸி., நிர்ணயித்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மார்ச் 22) 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் இல்லை.

தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெவ் 33 ரன் எடுத்தார். கேப்டன் ஸ்மித் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதிகபட்சமாக மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் டேவிட் வார்னர் 23, லபுஸ்சங்கே 28, அலெக்ஸ் கரே 38, ஸ்டோயின்ஸ் 25, அபோட் 26, அகர் 17, ஸ்டார்க் 10 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா3, சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
