திருப்பத்துார் : திருப்பத்துார், பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம், 43. இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது, மனைவி அனிதா, 38. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனிதா, மோட்டூர் கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் பத்து ஆண்டுகளாக, ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
சதாசிவம் தினமும், குடித்து விட்டு வந்து அனிதாவிடம், பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், மனமுடைந்த அனிதா, சில தினங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், திருப்பத்துார் அருகே ரயில் தண்டவாளத்தில், இன்று (மார்ச்.,22)ம் தேதி காலை, பெண் உடல் ஒன்று, கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.
போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், காணாமல் போன அனிதா என, தெரியவந்தது. போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.