திருப்பூர் : திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஏ.இ.பி.சி., சார்பில், 49 வது 'இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர்' இன்று (மார்ச்.,22)ம் தேதி துவங்கியது. செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியை மையமாக கொண்டு நடக்கும், இக்கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது.
![]()
|
கண்காட்சியை, 'பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் லீடர்ஸ்' அசோசியேஷன் தலைவர், சுவாமிநாதன் துவக்கி வைத்தார். ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர், குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, 70 கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டனர்.
கண்காட்சி அரங்குகளில், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆடைகள், ஷாக்ஸ், குழந்தைகளை எடுத்துச்செல்லும் 'கேரியர்'கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, உள்ளாடைகள், விளையாட்டு ஆடைகள், இரவுநேர ஆடைகள், 'பார்ட்டி' ஆடைகள் என, பல்வகை ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், டைல்ஸ் தரையில் நடக்க உதவும் நவீன 'ஷாக்ஸ்' வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் இருந்து, பாலியஸ்டர் நுாலிழை மற்றும் ஆடைகள் தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
![]()
|
கண்காட்சி குறித்து, ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
49 வது 'இந்தியா நிட்பேர்' திருப்பூர் சிறப்பும், தனித்தன்மையும் கண்காட்சியில் எதிரொலிக்க வேண்டும். செயற்கை நுாலிழை ஆடைகள், திருப்பூரின் எதிர்காலமாக இருக்கும். பருத்தி நுாலிழை ஆடை ஆர்டர், ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டுமே கிடைக்கிறது.
ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக இயங்க, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பிரதானமாக இருக்கும். உலகம் முழுவதும் பசுமை தொழில்நுட்பத்தையும், நீடித்தநிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பிரதானமாக இருக்கிறது ; திருப்பூர் அவற்றில் முன்னோடியாக விளங்குகிறது. ஒட்டுமொத்த மின்தேவையை காட்டிலும், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்.
கண்காட்சியில், 75க்கும் அதிகமான வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர். திருப்பூரின் ஒட்டுமொத்த, செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' சப்ளை செய்ய, நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சீனா, தைவானில் இந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 'பேப்ரிக்' சாயமிடும் தொழில்நுட்பமும் வெற்றியடைந்துள்ளது.
இவ்வாறு சக்திவேல் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement