நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் ஸ்மூத்தாக விரைவாகச் சென்று திரும்ப ஹேட்ச்பேக் கார்கள் பல இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. நகரங்களில் ஓட்டுவதற்கான சிறந்த பட்ஜெட் கார் உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. சிட்டி டிரைவிங்கிற்கான காரைத் தேர்ந்தெடுக்கும்போது மைலேஜ், சௌகரியம் மற்றும் சிறப்பம்சங்கள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நகரச் சாலைகளை 5 பட்ஜெட் ஹாட்ச்பேக் கார்களை இங்கே பார்ப்போம்.
ஆல்டோ
![]()
|
டாடா டியாகோ
ஹேட்ச்பேக் கார்களின் சந்தையில் டாடா டியாகோ கணிசமான பங்கை கைப்பற்றியுள்ளது. ஒரு ஸ்டைலான, நடைமுறைக்கு ஏற்ற ஹேட்ச்பேக் இது. நாம் தரும் பணத்திற்கான மதிப்பை வழங்குகிறது. இது விசாலமான இடம், வசதியான இருக்கைகள் மற்றும் ஸ்மூத்தான ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திலும் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
மாருதி எஸ்பிரஸ்ஸோ
இதன் டிசைன் பலருக்கு பிடிக்காது. பலருக்கு பிடிக்கும். ஆனால் மைலேஜ், கம்போர்ட், பராமரிப்பு செலவுகள், ஓட்டுதல் தரம் ஆகியவற்றில் இந்த கார் சிட்டி சாலைகளுக்கு மிகவும் ஏற்றது. விலையும் சுமார் 7 லட்சத்திற்குள் அடங்கும். இதன் 180 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் சாலைகள் முழுமையாக தெரிய உதவும். புதிதாக கார் வாங்கும் பெண்கள் சிரமமின்றி ஓட்டிப் பழகலாம்.
ஹூண்டாய் சான்ட்ரோ
![]()
|
நகரத்தில் ஓட்டுவதற்கான மற்றொரு பிரபலமான தேர்வு சான்ட்ரோ. நான்கு அமர்ந்து செல்வதற்கு ஏற்ற விசாலமான இடம், வசதியான இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஏ.எம்.டி., கியர்பாக்ஸுடன் கிடைப்பதால், போக்குவரத்தில் ஓட்டுவதை எளிதாக்குகிறது.
ரெனால்ட் க்விட்
![]()
|
இது ஒரு ஸ்டைலான மற்றும் பட்ஜெட் ஹேட்ச்பேக் ஆகும். இதுவும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. நம்மூர் சாலைகளின் தரம் தெரிந்தது தான். பள்ளங்கள், ஸ்பீட் பிரேக்கர்களில் தட்டாமல் செல்ல முடியும். இது ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவுடன் வருவதால், நெருக்கடியான பார்க்கிங்கிலும் டென்ஷனின்றி விட்டு எடுக்கலாம்.