திருப்பூர்:''இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்கக் கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை,'' என, ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.
திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம், ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன், பொதுச்செயலர் கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலையில் திருப்பூரில் நடந்தது.
அதன் தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், ''திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.
''சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின், இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்கக் கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை,'' என்றார்.
உத்தரப் பிரதேச 'ஹிந்துமத்' பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில்,''தமிழகத்தில் மொழி ஒரு பிரச்னையில்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு ஏற்பட்டு விடக்கூடாது,'' என்றார்.