மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், நரசிம்ம நாயக்கன்பாளையம், முத்து நகரைச் சேர்ந்தவர், சங்கர். இவரது, மகன் மிதுன், 16. பிளஸ் 1 படித்து வந்தார்.
இன்று (மார்ச்.,22)ம் தேதி, நண்பன் வீட்டுக்கு செல்வதாக மிதுன், தன் பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின், வடமதுரையைச் சேர்ந்த, பாலவசந்த், பிரணவ், சுதர்சன், ரிதிதரன் ஆகியோருடன், மதியம் மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.
ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற, மிதுன் நீரில் மூழ்கினார். இது குறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு படையினரும், லைப் கார்டு போலீசாரும் இணைந்து, தண்ணீரில் மூழ்கிய மிதுனை, தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.