வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :தமிழகத்தை சேர்ந்த நான்கு மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து வருகிறது.இந்த வகையில், நான்கு மாவட்ட நீதிபதிகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியம், 2022, ஆக., 10ல் பரிந்துரை அளித்தது. இதற்கு, தமிழக முதல்வர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்தனர்.
![]()
|
இதன் அடிப்படையில், தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.இதற்கான தீர்மானம் வெளியிடப்பட்டது. மற்றொரு தீர்மானத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு, மூத்த வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங் ப்ராரை நீதிபதியாக நியமிக்க கோரி 2022 ஜுலை 25ல் அளித்த பரிந்துரையை மீண்டும் கொலீஜியம் வலியுறுத்தி உள்ளது.