சென்னை: சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது
சென்னையில் ஜி-20 மாநாடு குறித்த கருத்தங்கு நடைபெற உள்ளது. கிண்டி பகுதியில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கு பெற உள்ளனர் . இதனைஅடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் வரும் 25 ம் தேதி வரையில் டிரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குமிடம் , பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வரும் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.