வேலுார் : பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு, கடந்தாண்டு, மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, அந்த அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், அந்த அமைப்பு மீதான, தடை செல்லும் என, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேலுார் மாவட்டத்தில், பா.ஜ., மற்றும் ஹிந்து இயக்க முக்கிய நிர்வாகிகள், 40 பேர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 20 இடங்களில் 24 மணி நேரம் போலீசார் ரோந்து செல்கின்றனர். வேலுார் கோட்டைக்குள், அந்த அமைப்பினர் வருவதை தடுக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.