வேலுார் : வேலுார் மாவட்ட, ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனராக பணிபுரிபவர், ஆர்த்தி, 41. இவர் மீது, லஞ்ச புகார்கள் வந்ததையடுத்து, வேலுார், சத்துவாச்சாரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (மார்ச்.,21)ம் தேதி சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த, இச்சோதனையில், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‛ஆர்த்தியின், தர்மபுரி வீட்டில் நடந்த சோதனையில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 19 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் 60 பவுன் தங்க நகைகளுக்கான ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தப்படும்.' என்றனர்.