'கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்' என, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறிய தகவல் தெரியவந்துள்ளது.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், நேற்று நடந்தது. அதில் ஸ்டாலின் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. நாடு முழுதும் இந்த ஒற்றுமை உணர்வோடு, மதச்சார்பற்ற தலைவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டால், பா.ஜ.,வை வீழ்த்த முடியும்.
தேர்தலுக்கான பணிகளை துவக்கி விடுங்கள். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துங்கள். சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். தி.மு.க., நிர்வாகிகளால், கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படாதவாறு, மாவட்டச் செயலர்கள் பார்த்து கொள்ள வேண்டும். சில இடங்களில் வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கின்றன; இவற்றை அனுமதிக்காதீர்கள். தேவையில்லாத பிரச்னைகளை பேசாதீர்கள்; வரம்பு மீறி தவறாக பேசுவதை கட்டுப்படுத்துங்கள்.இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார். - நமது நிருபர் -