வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இந்திய ரயில்வேயில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, 'ஏசி' ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் கூடுதலாக, '3இ' எனப்படும், மூன்றாம் வகுப்பு ஏசி எகானமி என்ற வகுப்பை 2021 செப்., மாதம் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
இந்த வகுப்புக்கான கட்டணம், வழக்கமான மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியை விட 6 - 8 சதவீதம் குறைவு. வழக்கமான மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 72 இருக்கைகள் உள்ளன. 3இ பெட்டியில், 80 இருக்கைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், 3இ ஏசி வகுப்பு திரும்பப் பெறப்பட்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியுடன் இணைக்கப்பட்டது. பின், இரண்டுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 3இ ஏசி வகுப்பில் பயணியருக்கு போர்வை கொடுக்க துவங்கியதை அடுத்து, கட்டணம் உயர்த்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
![]()
|
தற்போது, இந்த இணைப்பு உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. 'முன்பு இருந்ததை போல 3இ ஏசி பெட்டி குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும்' என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, இந்த பெட்டிக்கான கட்டணம், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியை விட 60 - 70 ரூபாய் வரை குறையும் என கூறப்படுகிறது.