மோடிக்கு எதிரான போஸ்டர்: 36 வழக்குகள் பதிவு; 6 பேர் கைது

Added : மார் 23, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: புதுடில்லியின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட 'போஸ்டர்'களை போலீசார் அகற்றினர். இது தொடர்பாக, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நகரின் பல்வேறு இடங்களில், பிரதமர் மோடிக்கு
Anti-Modi poster: 36 cases registered; 6 people arrested  மோடிக்கு எதிரான போஸ்டர்: 36 வழக்குகள் பதிவு; 6 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புதுடில்லியின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட 'போஸ்டர்'களை போலீசார் அகற்றினர். இது தொடர்பாக, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நகரின் பல்வேறு இடங்களில், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டிருந்தன. இவற்றில், 'மோடியை நீக்குங்கள்; நாட்டை காப்பாற்றுங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.


நகரில் இப்படி ஒட்டப்பட்டிருந்த, 2,000க்கும் மேற்பட்ட போஸ்டர்களை போலீசார் அகற்றி உள்ளனர். இந்நிலையில், போஸ்டர்கள் கட்டுகளுடன் சென்ற ஒரு வாகனத்தை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவற்றை ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொடுப்பதற்காக செல்வதாக அந்த வாகன டிரைவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 36 வழக்குகள் பதிவு செய்து உள்ள போலீசார், அந்த போஸ்டர்களை அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.


latest tamil news

வழக்கமாக போஸ்டர்களில், அதை வெளியிடுவது யார், எங்கு அச்சடிக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இந்தத் தகவல்கள் இல்லாததால், போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'மோடி அரசு சர்வாதிகாரத்தின் புதிய உச்சம்' என, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி, தன் சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

23-மார்-202317:22:45 IST Report Abuse
Nandakumar Naidu. Poster must be not .. it msut be...
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
23-மார்-202312:43:01 IST Report Abuse
Raa ஆம் ஆத்மி கட்சி சின்னத்தாலேயே அடிக்கணும் (போஸ்டர் போட்டவங்கள)
Rate this:
Cancel
23-மார்-202309:43:39 IST Report Abuse
தமிழ் இதே மற்ற கட்சி தலைவர்களைப்பற்றி சங்கிகள் பேசும் பேச்சு இருக்கே அப்பப்பா. இவனுங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
23-மார்-202310:37:44 IST Report Abuse
வாய்மையே வெல்லும்திருடனுக்கு திருடன் தான் தோள்கொடுக்கவேண்டும் அது தான் திராவிடம் ... வெட்கக்கேடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X