சென்னை : வளி மண்டல கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் மார்ச், 26 வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த, 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.