ராமநாதபுரம்-ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவரை தாக்கியவர்களைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை தலைவர் தினகரன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர்மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாகடையை அடைத்து விட்டு சென்ற போது பதுங்கி இருந்துதாக்கியவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும், எனவலியுறுத்தினர். சங்க மாவட்ட பொருளாளர் செல்வம், நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.