ராமநாதபுரம்--மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மார்ச் 28, 29ல் நடக்கிறது. கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாள்தோறும் பள்ளி, கல்லூரி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மார்ச் 28ல் பார்வையற்றவர்களுக்காகவும், மார்ச் 29ல் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்காகவும் நடக்க உள்ளது. இம்முகாமில் பழைய பஸ் பயண அட்டை புதுப்பித்தும் வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் 1, யூ.டி.ஐ.டி நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 4, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள். பணிபுரியும் நிறுவன சான்று, கல்வி நிறுவன சான்று, சுய தொழில் சான்று, கடந்த நிதியாண்டு பெற்ற பஸ் பயண சலுகை அட்டை அசல் போன்ற சான்றுகளுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.