திருப்புத்துார்--திருப்புத்தூர் ஒன்றியம்நெடுமரத்தில் நாளை மலையரசி அம்மன் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கலைவாணி முன்னிலை வகித்தார். மருத்துவ, கால்நடை மருத்துவ, தீயணைப்பு, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மஞ்சு விரட்டு விதிமுறைகள் குறித்து மஞ்சுவிரட்டு அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
காலை 11:00 மணிக்கு துவங்கி 3 மணி நேரம் நடத்தவும், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள், முதலுதவி மருத்துவ மையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் மாணிக்கவாசகம், நெடுமரம் இளங்கோ, வக்கீல் அழகர் உள்ளிட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.