மானாமதுரை--ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் கோபிநாத் 38, நேற்று முன் தினம் இரவு மதுரைக்கு காரில் சென்று விட்டு மானாமதுரை வழியாக உச்சிப்புளிக்கு சென்றார்.
மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலையில் சங்கமங்கலம் என்ற இடத்திற்கு அருகே சென்ற போது ராமேஸ்வரத்தில்இருந்து மதுரை அனுப்பானடிக்கு மற்றொரு காரில் சிந்துஜா குடும்பத்தினர் வந்தனர்.
2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்காரை எதிர் திசையில் ஓட்டி வந்த கோபிநாத் பலியானார். மற்றொரு காரில் வந்த டிரைவர் வேல்முருகன், சிந்துஜா, பழனி குமார், சஜித்,சஷ்டிகா ஆகிய 5 பேரும் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.