''தப்பு செய்றவங்களை, 'போட்டு' குடுக்கிற வேலையில இருக்கிறவரே, அதுக்கு உடந்தையா இருந்தா உருப்படுமா வே...'' என, ஆதங்கப்பட்ட அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்துல ரெண்டு, 'டாஸ்மாக்' கடைகள், 'பார்'கள் இருக்கு... ராத்திரி, 10:00 மணிக்கு கடையை மூடி மறுநாள் மதியம், 12:00 மணிக்கு திறக்கிற வரைக்கும், பார்கள்ல திருட்டுத்தனமா கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கு வே...
''அந்த ஏரியாவுல இருக்கிற உளவுப்பிரிவு போலீஸ்காரர், இதை எஸ்.பி., ஆபீசுக்கு எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கணும்... அவரோ பாருக்கு, 10 ஆயிரம்னு, மாசா மாசம் மாமூல் வசூலிக்காரு வே...
![]()
|
''இது போக, 'குட்கா' பொருட்களை விற்பனை செய்ற மொத்த வியாபாரிகளிடமும் மாசம், 10 ஆயிரம் ரூபாயும், சில்லறை விற்பனை கடைகள்ல, 2,000 - 3,000 ரூபாய் வரைக்கும் வசூலிக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''வாரும் குமரேசன்... இப்படி உட்காரும்...'' என, நண்பரை வரவேற்றார் குப்பண்ணா.