''பக்கத்து மாவட்டத்துக்கு பந்தி போட்டதை பத்த வச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்குள் புகுந்தார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., புள்ளி மேல ஏகப்பட்ட புகார்கள், அறிவாலயத்துல குவிஞ்சது... இதை விசாரிக்க, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., தலைமையில விசாரணை குழுவை நியமிச்சா ஓய்...
''அந்தக் குழுவை, 'தாஜா' பண்றதுக்காக, 'மாஜி'க்கு வேண்டிய கன்னியாகுமரி மாவட்ட நிறுவனத்துக்கு, திருநெல்வேலி டெண்டர் பணிகளை ஒதுக்க, தி.மு.க., புள்ளி ஏற்பாடு பண்ணியிருக்கார்...

''அதாவது, முக்கிய புள்ளியின் தொகுதிக்குள்ள இருக்கற சட்டக் கல்லுாரியில நுாலகம் கட்டறதுக்கான, 5.58 கோடி ரூபாய் டெண்டரை, உள்ளூர் நிறுவனங்களுக்கு தராம, 'கன்னியாகுமரி மாவட்ட நிறுவனத்துக்கு தரணும்'னு, அரசு அதிகாரிகளுக்கு முக்கியப் புள்ளி பரிந்துரை கடிதம் அனுப்பிச்சிருக்கார் ஓய்...
''இப்ப, இந்தக் கடிதத்தையும் அறிவாலயத்துக்கு அனுப்பி வச்சிருக்கற எதிர் கோஷ்டியினர், மாவட்ட புள்ளி மேலயும், விசாரணைக் குழு, 'மாஜி' மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
எதிரில் வந்த நண்பர்களை பார்த்த அன்வர்பாய், ''அப்துல் வஹாப், ஆஸ்டின் நாளைக்கு சாவகாசமா பேசலாம் பா...'' எனக் கூறி விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.