துமகூரு-குனிகல்லின், சிக்ககெரே பாலம் அருகில், பைக்கில் இருந்து தவறி விழுந்து, இருவர் உயிரிழந்தனர்.
துமகூரு குனிகல்லை சேர்ந்தவர்கள் சேத்தன், 28, கிரண், 19. இவர்கள் இருவரும், நேற்று காலை ஹுலியூர்துர்காவுக்கு பைக்கில் புறப்பட்டனர்.
குனிகல்லின், சிக்ககெரே கிராமத்தின், பாலம் அருகில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், உருண்டு விழுந்தது. கீழே விழுந்த இருவரும் காயமடைந்து உயிரிழந்தனர். ஹுலியூர்துர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement