பிரதமர் மோடிக்கு நன்றி: தி.மு.க., பிரமுகர் 'பேனர்'

Added : மார் 23, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுாரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரது போட்டோவுடன் தி.மு.க., கிளை செயலர் வைத்த, 'டிஜிட்டல் பேனரால்' பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலுார் மாவட்டம், காரை மலையப்ப நகர் தி.மு.க., கிளை செயலராக இருப்பவர் சிவகுமார். பாலக்கரை பகுதியில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின்
Thanks to PM Modi: DMK, celebrity Banner  பிரதமர் மோடிக்கு நன்றி: தி.மு.க., பிரமுகர் 'பேனர்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெரம்பலுார்: பெரம்பலுாரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரது போட்டோவுடன் தி.மு.க., கிளை செயலர் வைத்த, 'டிஜிட்டல் பேனரால்' பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், காரை மலையப்ப நகர் தி.மு.க., கிளை செயலராக இருப்பவர் சிவகுமார். பாலக்கரை பகுதியில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் பேனர் வைத்தார். அந்த பேனரில், 'நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்' என தெரிவித்து இருந்தார்.


இந்த பேனரால், பெரம்பலுார் தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது. தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் இருந்து, கிளை செயலர் சிவகுமாரை கண்டித்ததாகவும், இதையடுத்து அந்த பேனரை அவர் அகற்றியதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-மார்-202318:06:55 IST Report Abuse
MARUTHU PANDIAR கொள்கை வேற ""கொள்""கை வேற அப்படிக்கறாங்க.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
23-மார்-202316:24:05 IST Report Abuse
Bala எனக்கு தெரிந்து பல திமுக காரர்கள் பாரத பிரதமர் திரு மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்களாக மாறிவருகிறார்கள். இதுவே இன்றைய nilamail
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
23-மார்-202312:22:40 IST Report Abuse
N.K எம்பி சீட் வேண்டுமென்றால் திமுக எதுவும் செய்யும். பாஜகவும் திமுகவை சேர்க்க முயன்றதால்கூட அண்ணாமலை பிரச்னையை கிளப்பி இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X