வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெரம்பலுார்: பெரம்பலுாரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரது போட்டோவுடன் தி.மு.க., கிளை செயலர் வைத்த, 'டிஜிட்டல் பேனரால்' பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், காரை மலையப்ப நகர் தி.மு.க., கிளை செயலராக இருப்பவர் சிவகுமார். பாலக்கரை பகுதியில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் பேனர் வைத்தார். அந்த பேனரில், 'நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்' என தெரிவித்து இருந்தார்.
இந்த பேனரால், பெரம்பலுார் தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது. தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் இருந்து, கிளை செயலர் சிவகுமாரை கண்டித்ததாகவும், இதையடுத்து அந்த பேனரை அவர் அகற்றியதாகவும் கூறப்படுகிறது.