நாகர்கோவில் : நாகர்கோவில் அருகேவுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்து மீன் வலை கம்பெனியில் வேலை செய்கிறார். அவரை, அப்பகுதி பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் காதலித்தார்.
சம்பவத்தன்று திருமணம் செய்யலாம் எனக்கூறி சிறுமியை காதலன், 'பைக்'கில் அழைத்து சென்றார். அவருக்கு துணையாக அப்பகுதி ஒன்பதாம் வகுப்பு மாணவனும் சென்றார்.
ஆள் இல்லாத ஒரு வீட்டில், சிறுமியை காதலன் பலாத்காரம் செய்தார்.
பின், உடன் சென்ற மாணவனும், 'சம்பவத்தை வெளியில் சொல்லி விடுவேன்' என மிரட்டி, சிறுமியை பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, பாலிடெக்னிக் மாணவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒன்பதாம் வகுப்பு மாணவனையும் நாகர்கோவில் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.