நமது பாரம்பரியத்துடன் ஒன்றி இருக்கும் எண்ணெய் வித்துகளை பிரித்தால் அது முழுமை ஆகாது. சமையலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு, மட்டுமல்லாமல் நாம் மலைப்போல் நம்பி இருக்கும் மண்ணுக்கும் ஏராளமான நன்மைகளை இந்த எண்ணெய் வித்துக்கள் அளிக்கின்றன.
குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கும், செடி மற்றும் மரங்களின் ஆரோக்கியத்திற்கும் அதீத பலனை அளிக்கும் என்றால் மிகையாகது. அப்படிப்பட்ட எண்ணெய் வித்துகளிலில் ஒன்றாக கடலையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கடலை புண்ணாக்கு மண்ணுக்கும், மரங்களுக்கும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
![]()
|
தேவையான பொருட்கள்
கடலை புண்ணாக்கு - 50கிராம் கிலோ
நாட்டுசர்க்கரை - 50கிராம்
தேங்காய் - 1.2 மூடி
கனிந்த வாழைப்பழம் - 1
தண்ணீர் - 1லிட்டர்
செய்முறை
![]()
|
தேங்காயை உடைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில், வாழைப்பழம், தூளாக்கிய கடலை புண்ணாக்கு, நாட்டுச் சர்க்கரை, தயிர், அரைத்த தேங்காய், 1லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து காற்றுப்புகாத அளவிற்கு பிளாஸ்டிக் கவரால், பக்கெட்டை கட்டி நிழலான இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும்.
24 மணிநேரம் கழித்து பக்கெட்டை திறந்து அதனுடன், 5லிட்டர் தண்ணீர் சேர்த்து செடி, மரங்களுக்கு மாலை நேர்த்தில் தெளிக்க வேண்டும். இந்த கரைசலை 2,3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
![]()
|