வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பார்லி., இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13ல் துவங்கியது. ஆரம்பித்த நாளில் இருந்து நேற்று வரை, ஒரு நாள் கூட சபை அலுவல்கள் முழுமையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே தினந்தோறும் அமளி வெடிப்பதால், இரு சபைகளுமே ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

8வது நாளான இன்றும் (மார்ச் 23) அவை துவங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதேநேரத்தில் ஆளுக்கட்சியினர் காங்., எம்.பி ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இதனால் பார்லி., இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பார்லி., கூட்டத்தொடரை ஏப்., 6க்கு பதிலாக, வரும் 29ம் தேதியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.