சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, பொம்மண்ண செட்டிக்காட்டை சேர்ந்தவர் துளசிமணி, 23. அதே பகுதியில் ஜவுளி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் சேலம், குகை, புலிக்குத்தி, 4வது தெருவை சேர்ந்தவர் ஜமீனா, 37. அதே பகுதியில் காய்கறி, பலகார கடை நடத்துகிறார். அங்கும் பூட்டு உடைக்கப்பட்டு, 13 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அதே தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 31. அவர், வீடு அருகே நடத்தும், 'நெட் சென்டர்' பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.